Snapchat என்பது, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் தருணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு விரைவான மற்றும் மகிழ்ச்சியான வழியாகும் 👻
SNAP
• Snapchat நேரடியாக கேமராவில் திறக்கிறது, ஒரு தட்டு தட்டினால் புகைப்படம் எடுக்கலாம் அல்லது அழுத்திப் பிடித்தால் வீடியோ எடுக்கலாம்.
• லென்ஸ்கள், வடிகட்டிகள், Bitmoji மற்றும் பலவற்றைக் கொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்!
• Snapchat சமூகம் உருவாக்கும் புதிய லென்ஸ்களை நாள்தோறும் பயன்படுத்திப் பாருங்கள்!
அரட்டை
• நேரலைச் செய்தியனுப்பல் வழியாக நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள் அல்லது குழுக் கதைகளின் மூலம் உங்கள் நாளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
• ஒரே நேரத்தில் 16 நண்பர்களுடன் வீடியோவில் அரட்டை அடியுங்கள், அரட்டை அடிக்கும்போது நீங்கள் லென்ஸ்கள் மற்றும் வடிகட்டிகளைக் கூடப் பயன்படுத்தலாம்!
• உங்களுக்காகவும் ஒரு நண்பருக்காகவும் மட்டும் தயாரிக்கப்பட்ட தனித்துவமான Bitmoji ஆகிய Friendmojiகள் மூலம் உங்களை வெளிப்படுத்துங்கள்.
கதைகள்
• நண்பர்களுடைய நாள் எப்படிச் சென்றது என்பதைக் காண, அவர்களுடைய கதைகளைப் பாருங்கள்.
• உங்கள் ஆர்வங்களின் அடிப்படையிலான Snapchat சமூகத்தின் கதைகளைப் பாருங்கள்.
• உடனடிச் செய்திகள், தனித்துவமான அசல் நிகழ்ச்சிகளைக் கண்டறியுங்கள்.
ஸ்பாட்லைட்
• ஸ்பாட்லைட் என்பது, Snapchatல் மிகச் சிறந்தவற்றைக் காட்சிப்படுத்துகிறது!
• உங்கள் சொந்த Snapsஐச் சமர்ப்பியுங்கள் அல்லது உட்கார்ந்து மகிழ்ச்சியாகப் பாருங்கள்.
• உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுங்கள், அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வரைபடம்
• உங்களின் சிறந்த நண்பர்களுடன் உங்கள் இடத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அல்லது பேய் முறையின் மூலம் இதிலிருந்து வெளியேறுங்கள்.
• உங்களுக்கான பிரத்தியேக வரைபடத்தில் நண்பர்கள் தங்களுடைய இடங்களைப் பகிர்ந்துகொள்வார்கள், இதன்மூலம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் காணலாம்.
• அருகிலுள்ள அல்லது உலகின் பிற பகுதிகளில் உள்ள சமூகத்திடமிருந்து நேரலைக் கதைகளை ஆராயுங்கள்!
நினைவுகள்
• உங்களுக்குப் பிடித்த தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரம்பின்றி சேமியுங்கள்.
• பழைய தருணங்களைத் திருத்தி நண்பர்களுக்கு அனுப்புங்கள் அல்லது அவற்றை உங்கள் கேமராச் சுருளில் சேமியுங்கள்.
• உங்களுக்குப் பிடித்த நினைவுகளில் இருந்து கதைகளை உருவாக்கி அவற்றை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நட்புத் தகவல் குறிப்புப் பக்கம்
• ஒவ்வொரு நட்புக்கும் அதற்கென்று ஒரு தனிச் சிறப்புத் தகவல் குறிப்புப் பக்கம் இருக்கும், அங்கு நீங்கள் ஒன்றாகச் சேமித்த தருணங்களைப் பார்க்கலாம்.
• உங்களுக்கிடையில் பொதுவாக உள்ள புதிய விஷயங்களை ஈர்ப்புகளின் மூலம் கண்டறியுங்கள் — நீங்கள் எவ்வளவு காலம் நண்பர்களாக இருக்கிறீர்கள், உங்கள் ஜாதகப் பொருத்தம், உங்கள் Bitmoji ஃபேஷன் உணர்வு மற்றும் பல!
• நட்புத் தகவல் பக்கங்கள் உங்களுக்கும் ஒரு நண்பருக்கும் இடையிலானவை, உங்கள் நட்பைச் சிறப்பாக்குவது எதுவோ அதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் பிணைப்பை உருவாக்கலாம்.
மகிழ்ச்சியாக Snap செய்யுங்கள்!
கவனத்திற்கு: Snapchat பயனர்கள் உங்களுடைய செய்திகளை ஒரு ஸ்க்ரீன்ஷாட் மூலமோ அல்லது ஒரு கேமரா மூலமோ அல்லது வேறு வழிகளிலோ எப்போது வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம், அல்லது சேமிக்கலாம். நீங்கள் என்ன Snap செய்கிறீர்கள் என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள்!
எங்கள் தனியுரிமை நடைமுறைகள் குறித்த முழு விளக்கத்தைப் பெறுவதற்கு, தயவுசெய்து எங்கள் தனியுரிமை மையத்தைப் பாருங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
30 ஜூலை, 2025